அக்காவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிய கர்ப்பிணி! திருமணமான 5 மாதத்தில் நிகழ்ந்த சோகம்
திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணிற்கு நடந்த திருணம்
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணமான நாளிலிருந்து மாமியார் வரதட்சணை கொடுமை செய்த நிலையில், குறித்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
மாமியாரின் தொல்லை அதிகமாகவே கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனது தாய்வீட்டில் வந்து இருந்துள்ளார். கணவரும் வந்து அழைக்காமல் இருந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட சோகம்
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் செல்போனுக்கு ‘‘ 5 மாத சிசுவையும் கலைக்க மாமியார் முயல்கிறார். எனது சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்’’ என வாட்ஸ்அப்பில் ஆடியோவாக பதிவு செய்து அனுப்பிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த தகவலை பார்த்துவிட்டு உடனே அக்கா வீட்டிற்கு வரும்முன்பு இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இந்துமியின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

