கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலி... வளைகாப்பு விழாவால் ஏற்பட்ட துயரம்
கொரோனாவின் தொற்றினால் சென்னையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா என்பவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கார்த்திகா(29) என்பவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கார்த்திகா இறப்பதற்கு முன்பு காணொளி ஒன்றினை தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். அதில் தயவுசெய்து கொரோனா வைரஸை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை.
இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
குறித்த பெண் மருத்துவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சியினை குடும்பத்தினர் நடத்தியுள்ளனர். அதன் பின்பே இவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
