குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் Prebiotic And Probiotic Capsules
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நோயின்றி ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே பெரிய ஆசையாக இருக்கும்.
இதற்கு மிக முக்கிய காரணம் சரிவிகித உணவுகள், உணவுகளில் எந்தளவுக்கு மெனக்கெடல்கள் இருக்குமோ அதுவே உங்களது ஆரோக்கியத்தில் வெளிப்படும்.
வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் கூடிய காய்கறிகள், பழங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியான உணவுகளாக இருந்தால் ஒரு சிலருக்கு அது உடம்பில் சேர்வதில்லை, ஒல்லியாக, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களாக இருப்பார்கள்.
Dr. Microbe / iStock
இதற்கு காரணம் செரிமானமான உணவின் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளாமல் போகலாம், எனவே குடலின் ஆரோக்கியம் மிக முக்கியம்.
நல்ல பக்டீரியாக்களே தீங்கிழைக்கும் கிருமிகளை கொன்று சத்துக்கள் உடலில் சேர துணைபுரிகிறது.
புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தயிர், வாழைப்பழம், தேங்காய் தண்ணீர், வெங்காயம், பூண்டு போன்றவற்றை குறிப்பிடலாம்.
குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளே Prebiotic And Probiotic Capsules.
குடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை சீர்படுத்துவதில் Probiotic நிறைந்த உணவுகள் தேவை, இவைகளுக்கு தேவையான சத்தை வழங்குவதே Prebiotic.
இம்மாத்திரைகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளவும், சுயமாக மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தை உண்டு பண்ணலாம்.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல் நோய் அலற்சி இருப்பவர்களுக்கு இம்மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
வயதான நபர்களுக்கு எலும்பு தேய்மானம் இருக்கும், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளாமல் போவதால் இது நிகழ்கிறது, இந்த தருணங்களில் Prebiotic And Probiotic Capsules பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் எடை அதிகரித்து ஒபிசிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மதிய உணவுடன் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தலாம், ஏனெனில் ஒபிசிட்டி-யானது பல நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
பக்கவிளைவுகள்
Prebiotic And Probiotic Capsules பயன்படுத்தும் போது வயிற்றில் அதிகளவு வாயு சேரலாம், பக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது வாயு உற்பத்தியும் அதிகரிக்கலாம்.
மேலும் அதிகளவு தண்ணீர் மற்றும் சரிவிகித உணவுகள் அவசியம், அதிகளவு கார்போஹைட்ரேட் உணவுகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
Prebiotic And Probiotic Capsules தொடர்ந்தோ அல்லது அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படலாம்.
மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரைகளை பயன்படுத்தவும், ஏதேனும் பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.