Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அசைவ உணவுகளின் பட்டியலில் இறால் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
இறால் சமையல் சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும்.
இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது வழக்கம்.
அந்தவகையில் ரொம்பவே எளிமையான முறையில் அசத்தல் சுவையில் குறுகிய நேரத்தில் இறால் தொக்கு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
மல்லி - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 5 ( 20 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
தொக்கு செய்வதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இறால் - 1/2 கிலோ
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, ஊற வைத்த வரமிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, தேவையானளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து சுத்தம் செய்து வைத்தள்ளள இறாலை சேர்த்து நன்றான கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி 3 நிமிடங்டகள் வரையில் வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும் கரம் மசாலாவை சேர்த்து, 1 நிமிடம் கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அட்டகாசமான சுவையில் அசத்தல் இறால் தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |