இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க... சில நிமிடங்களில் காலி ஆகிடுமாம்
ஹொட்டல் சுவையில் இறால் தொக்கு ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடல் உணவுகளில் ஒன்றான இறால் அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இதில் மீனைப் போன்று முட்கள் இல்லாததால் சிறு குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இறால் ஒரு சிறந்த கடல் உணவுகளில் ஒன்றாகும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் இல்லை.
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
கடுகு - 1/4 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் -1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் இறாலை அதன் ஓட்டை எடுத்துவிட்டு, நடுவே இருக்கும் நரம்பையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசனை போனதும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மசியும் அளவிற்கு வதக்கவும்.
இந்த கலவையில் இறாலை போட்டு நன்கு கிளறிவிட்டதும், கரம் மசாலா, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு வதக்கியதும், இறாலில் வரும் தண்ணீர் நன்கு வற்றும் அளவிற்கு நன்றாக கிளறிவிட்டு, இறக்கவும்.
தற்போது சுவையான இறால் தொக்கை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறி சாப்பிட்டால் ஹொட்டல் சுவையே தோற்று போய்விடுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |