மீசை தாடி இல்லாமல் புதிய கெட்டப்பில் விஜய்: ரசிகர்களுடன் வைரல் செல்ஃபி

Manchu
Report this article
நடிகர் விஜய் கட்சி பெயரை அறிவித்த பின்பு முதன்முதலாக ரசிகர்களுக்கு தரிசமாகி நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், கடந்த 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்தம்பித்த புதுச்சேரி சாலை
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்ததையறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
ரசிகர்களின் கூட்டத்தை பார்த்த நடிகர் விஜய் படப்பிடிப்பு வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டுள்ளார்.
ரசிகர்கள் தனக்காக கொடுத்த மாலையை கையில் வாங்கிக்கொண்டு கழுத்தில் போட்டதுடன், அதனை மீண்டும் ரசிகர்களுக்கே கொடுத்துள்ளார்
இதனால் அந்த சாலை 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |