குழந்தையை பணயம் வைத்து பணம் பறிக்க முயற்சித்த பிரசாந்த்! இரத்த காயத்துடன் சென்ற மூர்த்தி
குழந்தையை பணயம் வைத்து பணத்தை பறித்து விடலாம் என பிரசாந்த் திட்டம் போட்டு மிரட்டுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடிக்கின்றது.
கடந்த 5 வருடங்களாக வெற்றிக்கரமாக சென்று இன்னும் சில எபிசோட்களில் நிறைவிற்கு வர இருக்கின்றது.
அண்ணன்- தம்பிகளின் பாசத்தையும் மருமகள்களின் ஒற்றுமையையும் சமூகத்திற்கு தேவையானது படி அழகாக கூறியிருப்பார்கள்.
மேலும் குடும்பத்திற்கு மூத்தவர்களாக இருப்பவர்களிடம் எவ்வளவு பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கின்றது என்பதனை இந்த சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இரத்த காயத்துடன் சென்ற மூர்த்தி
இந்த நிலையில் ஜீவாவின் மாமனாரை பிரசாந்த் கொலை செய்து விட்டு பலியை ஜீவா, கதிர் மேல் போட்டு விடலாம் என திட்டம் போட்டு வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்.
ஆனால் பிரசாந்த் நினைத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்லப்படியாக மீனாவின் அப்பா வீடு திரும்பி விட்டார். பிரசாந்துமும் வசமாக மாட்டி கொள்கிறார்.
மிச்சம் இருக்கும் இருக்கும் பணத்தையும், பத்திரங்களையும் எடுத்து கொள்ளலாம் என மூர்த்தியின் வீட்டிற்குள் வந்து வசமாக வீட்டிலுள்ளவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்.
பின்னர், கயலை பணயம் வைத்து பணம் கேட்கிறார். ஆனால் வீட்டிலுள்ளவர்கள் அடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கிறார்கள்.
இந்த சண்டையில் மூர்த்தியின் தலையில் காயம் பட்டு இரத்தம் வடிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்த தனம் மற்றும் ஜீவா இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |