கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா சுபாஷ்... Cannes விழாவுக்கு எப்படி போயிருக்காங்க பாருங்க
நடிகை பிரணிதா சுபாஷ் செம ட்ரெண்டிங்கான உடையில் Cannes திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை பிரணிதா
2009ஆம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ் அதனை தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் கடைசியாக அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த நிலையில் பிரணிதா,தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிரணிதா தற்போது ட்ரெண்டிங்கான உடையில் Cannes திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |