அரோராவுடன் பிரஜன் கேட்ட ஒற்றை கேள்வி- நாறு நாராக கிழிக்கப்பட்ட போட்டியாளர்களின் முகத்திரை
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அரோராவின் இன்றைய தினம் உள்ளே சென்ற பிரஜன் ஒரு கேள்விக் கேட்க, அதற்கு பிரஜன் கொடுத்த ரியாக்ஷன் அரோரா உண்மையில் யார் என்பதை வெளியில் கொண்டு வந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.
கிழிக்கப்பட்ட முகத்திரை
இந்த நிலையில், இன்றைய தினம் உள்ளே வந்த பிரஜன்- சாண்ட்ரா இருவரும் போட்டியாளர்களை பார்த்து, “ நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீர்கள்?” என கேள்வி கேட்க, அதற்கு அவர்கள் ஒரு ஏட்டில் அவர்களுக்கான காரணத்தை எழுதிக் கொடுக்க வேண்டும். அதனை பிரஜன்- சாண்ட்ரா இருவரும் படித்து பார்த்து உண்மை இல்லாவிட்டால் கிழித்து போட வேண்டும்.

அந்த டாஸ்க்கில் பார்வதி, “என்னுடைய உண்மையான முகத்தை காட்ட வந்தேன்..” என எழுத, சாண்டரா, “ அப்போது இது தான் உங்களுடைய ரியலா?” என நக்கலாக பேசியப்படி அவருடைய ஏட்டை கிழித்து போடுகிறார்.
அரோராவின் பேப்பரை கிழிக்க முன்னர், பிரஜனிடம் அரோரா கூறிய பதில் சக போட்டியாளர்களை அள்ளு கிளம்ப வைத்துள்ளது. இவ்வளவு நாட்களாக சாந்தமாக இருந்த அரோரா இன்றைய தினம் கொந்தளித்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளிவந்துள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |