எல்லை மீறிய பிரதீப்.. விசித்திராவுடன் அசிங்கமான உரையாடல்- கேட்டதும் ஷாக்காகிய நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீ்ட்டில் விசித்திரா பக்கத்தில் தூங்க ஆசை என பிரதீப் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தினமும் ஒரு டாஸ்க் பல சண்டைகள் இப்படி பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பிரதீப்பிற்கு வந்த ஆசை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விசித்திரா - ஜோவிகா ஆகியோருக்கு இடையில் சண்டைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.
இது ஒரு புறம் இருக்கையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தண்டனைகள் கொடுக்கும் பொழுது ஆண், பெண் இருவரும் ஒரே படுக்கை தான் படுக்க வேண்டும் என தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும் என பிரதீப் கூறியுள்ளார்.
இதை கேட்ட விசித்திரா , அப்போ ஏ பக்கத்துல படுத்து தூங்க போறீங்களா?..” என நக்கலாக கேட்டுள்ளார். அதற்கு பிரதீப், “ ஆமா...” என கூறியுள்ளார்.
இவ்வாறு இருவரும் அசிங்கமாக பேசிக் கொள்வது அங்கிருந்த மற்ற போட்டியாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பிரதீப் பொது நிகழ்ச்சியில் இப்படி பேசுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், “ இது என்னடா ... இது பிக்பாஸ் வீடு ஞாபகத்துல வைச்சிக்குங்க டா..” என கலாய்த்து வருகின்றார்கள்.
??#biggbosstamil #biggbosstamil7 #pradeepantony #vichitra https://t.co/88OQeEQo7C
— Imadh (@MSimath) October 5, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |