பிக்பாஸிற்காக ஸ்டேஷன் மாஸ்டர் வேலையை விட்டு ஓடிவந்த பிரபலம்.. இந்த சீசனில் இருக்கிறாரா?
பிக்பாஸ் 7 ல் உள்ள முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் பல நாள் காத்திருந்து கிடைத்த ஸ்டேஷன் மாஸ்டர் வேலையை பிக்பாஸிற்காக விட்டு வந்தாக கூறப்படுகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
ஸ்டேஷன் மாஸ்டர் இருந்தவர் யார்?
இந்த நிலையில் தினமும் ஒரு டாஸ்க் பல சண்டைகள் இப்படி பிக்பாஸ் வீடு பரபரப்பாக் இருக்கின்றது.
ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் தான் வெளியில் கூறியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் இரகசியமாக இருக்கின்றது.
அந்த வகையில் முக்கிய பிரபலங்களில் ஒருவரான பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்டேஷன் மாஸ்டர் வேலையை விட்டுட்டு வந்தாக கூறப்படுகின்றது.
தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தர்ம அடை வாங்கிக் கொண்டிருப்பவர் தான் பிரதீப். இவர் பற்றி சர்ச்சைகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இப்படியொரு நிலையில் தற்போது வெளியான தகவல் விமர்சகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |