பிரதீப்பிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கிய பிரபல ரிவி... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீபிற்கு பிரபல ரிவி மற்றொரு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் பிரதீப்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்த பிரதீப் சில வாரங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு காரணம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் முன் வைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அவரது வெளியேற்றம் நியாயம் இல்லை என்றும் அவருக்கு அநீதி நடந்துள்ளது என்றும் மக்கள் கமல்ஹாசன் மீது கொந்தளிப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய பிரபல ரிவி மற்றொரு வாய்ப்பை அவருக்கு கொடுத்து தனது தவறுக்கு பிராயச்சித்தம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆம் ஹாட் ஸ்டாரில் ஒரு வெப் தொருக்காக பிரதீப்பிடம் கதை கேட்டுள்ளதாகவும், இதற்கான பணி விரைவில் ஆரம்பிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஏனெனில் பிரபதீப் தான் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவை பிக் பாஸ் வீட்டிலிருந்து கூறியதுடன், அதனை நிறைவேற்றப்போவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கை திசை மாறி சென்றுவிடும் என்பதால் இந்த நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |