நாலு ஃபாரீன் படத்தை திருடி படம் பண்ணப் போறேன்.. பிக்பாஸிற்கு தக் லைஃப் கொடுத்த பிரதீப்!
“ நாலு ஃபாரீன் படத்தை திருடி படம் பண்ணப் போறேன்.” என பிக்பாஸ் பிரதீப் போட்ட டுவிட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரெட் கார்ட் வாங்கி சென்று பிரபலமாகியவர் தான் பிரதீப் ஆண்டனி.
மேலும் பெண்களுக்கு இவரால் பாதுகாப்பு இல்லை என்ற குற்றஞ்சாட்டின் அடிப்படையில் மாயா, பூர்ணிமா ரவி, ஐஷு, ரவீனா தாஹா, அக்ஷயா உள்ளிட்ட பெண்களால் வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது சர்ச்சை கிளம்பியது.
ஆனால் இன்னும் அந்த சர்ச்சை முற்று பெறவில்லை. வெளியேறிய பின்னர் அதிக ஆதரவை பெற்ற பிரதீப சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சூடுபிடிக்கும் டுவிட்
இந்த நிலையில் தற்போது அவரின் டுவிட்டர் பக்கத்தில், "சரி ஜாலியா இருந்துச்சு.. இப்போ 4-5 புரொட்யூசர்ஸ் என்னை நம்பி கதை கேட்கிறாங்க.. நான் IFFI GOA 2024 கிளம்புறேன்.
நாலு ஃபாரீன் படத்தை பார்த்து, திருடி.. ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்டோட வரேன்.. ஆள விடுங்க.. நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு போயிட்டு வரேன்.. ஆள விடுங்க" என கலாய்க்கும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
எப்போது வேலையில் அதிக கவனம் காட்டும் பிரதீப் தற்போது இருக்கும் இயக்குநர்களை கலாய்க்கும் வகையில் இந்த கருத்தை பகிர்ந்துள்ளார் என தெளிவாகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |