ரெட் கார்ட்க்கு முற்றுப்புள்ளி: பிரதீப் ஆண்டனிக்கு வந்த பரிசு என்ன தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர், கலவையான விமர்சனங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நடந்து முடிந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி, இவர் நடிகர் கவினின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
அருவி, வாழ், டாடா படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ஆண்டனி, இயக்குனராகும் முனைப்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த சீசனில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு வரவேற்பும் அதிகரித்து வந்தது, இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப்.
இதன்பின்னர் இவருக்கான ஆதரவு பலமடங்கு பெருகியது, சமூகவலைத்தளங்களில் ரெட் கார்டு வழங்கிய போட்டியாளர்களை திட்டித்தீர்த்தனர் பிரதீப்பின் ஆர்மியினர்.
தொடர்ந்து தன்னுடைய கருத்துகளையும் பிரதீப் ஆண்டனி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
நிகழ்ச்சி முடியும் போதுகூட பிரதீப் ஆண்டனியை தொலைக்காட்சி நிர்வாகம் அழைக்கவில்லை என்பதும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது பிரதீப்பின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது தொலைக்காட்சி நிர்வாகம்.
விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஸ்டார் சார்பாக பிரதீப் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் Flower Bouquet ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை புகைப்படம் எடுத்து பிரதீப் ஆண்டனி பதிவிட வைரலாகி வருகிறது.