இரண்டாவது மனைவியை விட்டுவிட்டு மகனுடன் பிரபுதேவா! எப்படி வளர்ந்துட்டாங்கனு நீங்களே பாருங்க
நடிகர் பிரபுதேவா இரண்டாவது திருமணம் முடித்து சில ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தனது மகனுடன் கோடை விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருகின்றார்.
நடிகர் பிரபுதேவா
தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய நடிகராகவும், நடன இயக்குனருமான பிரபுதேவா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வலம் வருகின்றார்.
இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் தனது 12ம் வயதில் 2008ம் ஆண்டு காலமானார்.
திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பின்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்றார். இவரது முதல் மனைவி பிரச்சினை செய்ததால் நயன்தாரா இவரை விட்டு பிரிந்தார்.
ஆனால் பிரபுதேவாவின் மனைவி இன்னும் நயன்தாரா மீது கோபமாகவே இருக்கின்றார். இந்நிலையில் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் மனைவியை வெளியே காட்டாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் பிரபுதேவா 50வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பின்பு தான் இருவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
மகனுடன் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா என்னதான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் தனது மகன்களை நன்றாகவே கவனித்து வருகின்றார். இந்நிலையில் மகனுடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றார்.
ஆம் தனது மகனுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் புதிதாக திருமணம் செய்த இரண்டாவது மனைவியுடன் நேரத்தினை செலவிடாமல், முதல்மனைவி மகன்களுடன் செலவழித்து வருகின்றீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.