பிரபுதேவாவும் மகன்களும் தான் முக்கியம்..10 வருடங்களாகியும் மனம் மாறாக முதல் மனைவி
“என்னுடைய கணவரையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வது தான் முக்கியம் என்று தோன்றியது..” என பிரபுதேவாவில் முதல் மனைவிக் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரபுதேவா
தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட சுந்தரம் மாஸ்டருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவா.
இவர், அவருடைய சகோதரர்கள் மற்றும் அப்பாவை போன்று சினிமாத்துறையில் பிரபலமாக இருந்தார்.
பிரபுதேவா ஆரம்ப காலங்களில் கதாநாயகராக பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
“உன்னாலே உன்னாலே”, “எங்கேயும் காதல்” உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் பயணம்
நடிப்பில் கலக்கிக்கொண்டிருந்த பிரபுதேவா, திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன்படி, தெலுங்கில் சித்தார்த், திரிஷா உள்ளிட்டோரை வைத்து திரைப்படம் இயக்கினார். அதே சமயம், தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படம் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பலத்த வரவேற்பை கொடுத்தது.
இதனை தொடர்ந்து, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட், ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.
காதல் திருமணமா?
இந்த நிலையில், பிரபுதேவாவுக்கு திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் எழ ஆரம்பித்தன.
பிரபுதேவா அவருடைய நடன க்ரூப்பில் இணைந்து பணியாற்றிய ரமலத் என்பவரை காதலி திருமணம் செய்து கொண்டார்.
ரமலத் இஸ்லாமியர் என்பதால் முதலில் பிரபுதேவாவின் குடும்பத்தில் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.
அதன் பின்னர், பிரபுதேவாவுக்காக ரமலத் இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறி லதா என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவர்களது திருமணத்தை அடுத்து அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
நயன்தாரா- பிரபுதேவாவுக்கு இடையிலான உறவு
இப்படியொரு சமயத்தில் தான் பிரவுதேவாவுக்கும் வில்லு பட நாயகி நயன்தாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதல், திருமணமாக மாறியது.
இந்த சர்ச்சை வெள்ளத்திரையில் பரபரப்பாக பேசப்பட்டு, முதல் மனைவி பேட்டியில் நயன்தாரா கடுமையான வார்த்தைகளால் திட்டியும் பேசியிருந்தார்.
அதன் பின்னர் தற்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் பிரிந்து வேறு வேறு பிரபலங்களை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம், குழந்தை என வாழ்ந்து வருகிறார்கள்.
முதல் மனைவி செய்த தியாகம்
இப்படியொரு நிலையில், ரமலத் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை கொடுத்திருக்கிறார். அதில், “ எனது பூர்வீகம் கேரளா. ஆனால் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான்.
என்னுடைய அப்பா, சகோதரர் இருவரும் சினிமாவில் தான் இருக்கிறார்கள். நானும் எதிர்பாராத வகையில் சினிமாவுக்குள் வந்து விட்டேன். சுமாராக 10 பத்து வருடங்கள் க்ரூப் டான்ஸராக இருந்திருக்கிறேன்.
தமிழில் கொஞ்சம் தான் பணியாற்றியிருந்தாலும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய பணியாற்றியிருக்கிறேன் ரஜினிகாந்த்த்தையும், சிவாஜியையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.மொத்தம் பத்து வருடங்கள் நான் சினிமாவில் டான்ஸராக இருந்திருக்கிறேன்.
மாறாக திருமணத்திற்கு பின்னர் என்னுடைய இலட்சியத்தை விட்டு விட்டேன். ஏனெனின் அப்போது என்னுடைய கணவர் மற்றும் மகன்கள் தான் முக்கியமாக தெரிந்தார்கள்...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
