தலையை விட வாய் பெரிதான போட்டு பறவை பற்றி தெரியுமா? தெரிஞ்சா அசந்துடுவீங்க
போட்டு பறவை மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் வாழும் ஒரு அரிய வகை பறவை இனம்.
பார்ப்பதற்கு ஆந்தையை ஒத்த உடலமைப்பை கொண்ட இந்த பறவையை பற்றி யாரும் நம்பவே முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான பல விடயங்கள் இருக்கின்றன இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போட்டு பறவை
பார்ப்பதற்கு பயங்கரமாக காட்சியளிக்கும் இந்த பறவை உண்மையில் மிகவும் மென்மையானது என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
மொத்தமாக ஏழு வகைகளில் காணப்படும் இந்த பறவை இனத்தின் சிறிய பறவைகள் 25 சென்றி மீற்றர் வரையிலும் பெரிய பறவைகள் 40 சென்றி மீற்றர் வரையிலும் வளர்ச்சியடையக் கூடியது.
இந்த பறவைகளின் அதிகபட்ச உடல் எடை 500 கிராமாக இருக்கின்றது. இரண்டு எலுமிச்சை பழத்தை முகத்தில் ஒட்ட வைத்ததை போல் காணப்படும் இதன் கண்கள் கடும் இருட்டிலும் தெளிவாக பார்க்கக் கூடிய சக்தி கொண்டது.
இந்த பறவை மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் போது மரக்கிளைக்கும் பறவைக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு தனது நிறத்தை துள்ளியமாக மாற்றிக்கொள்ளக் கூடியது. இவ்வாறு போட்டு பறவை எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது.
இந்த போட்டு பறவையின் வாய் இதன் தலையை விட பெரிதாக காணப்படும். இதனால் ஒரு தடவை வாய் திறந்தாலே தன்னை சுற்றி பறக்கும் பல பூச்சிகளை உணவாக்கிவிடுகின்றது.
மரக்கிளை போல் தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த பறவை அவ்வாறு தன்னை ஒரு நாள் முழுவதும் கூட உறைந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய சக்தி கொண்டது.
இவ்வாறு உறைந்த நிலையிலும் இதன் உடலில் இரத்த ஓட்டம் இதய துடிப்பு உட்பட அனைத்து உடல் இயக்க செயற்பாடுகளும் சீராக இடம்பெறுகின்றமை இயற்கையின் அலப்பரிய ஆச்சரியத்தை பறைசாற்றுவதாகவே அமைகின்றது.
போட்டு பறவையின் கண்கள் மூடிய நிலையிலும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என துள்ளியமாக கணிக்க கூடியது. இதன் கண்கள் மூடிய நிலையில் கண்களின் மேல் அமைந்திருக்கும் படலம் சென்சார் போல் செயற்படுகின்றது.
தனக்கென கூடு எதையும் அமைத்துக்கொள்ளாத இந்த பறவை மரக்கிளைகளிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது.
அது மட்டுமன்றி எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளை சிறுபருவத்திலேயே அதன் குஞ்சு பறவைக்கு போட்டு பறவை பயிற்றுவிக்கின்றது. இந்த பறவை இயற்கையின் ஓர் கொடையாகவே பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |