இந்த தொந்தரவுகள் உங்களுக்கு இருக்கா? பொட்டாசியம் குறைபாடு என்று அர்த்தமாம்
பொதுவாக நம் உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு பொட்டாசியத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
இது இதய நலன் முதல் இதய துடிப்பை முறையாக பராமரிப்பது வரை என உடலின் பல்வேறு செயல்பாடுகளை செய்கின்றது.
அதிலும் குறிப்பாக எலக்ட்ரோலைட்டான பொட்டாசியம், சோடியமோடு சேர்ந்து ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தும் வேலையை செய்கிறது.
இந்த பொட்டாசியம் உடலில் குறையும் பொழுது அதிகப்படியான வியர்வை, தொடர்ச்சியான வாந்தி, ரத்த இழப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் இப்படியாக பொட்டாசியம் நம் உடலில் குறையும் போது வேறு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன? அதனை எப்படி சரிச் செய்து கொள்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பொட்டாசியம் குறைபாட்டு நோய்கள்
1. தசைகள் சுருங்கவும் தளர்வடைவதற்கும் பொட்டாசியம் மிகவும் அவசியமாகும். ஆகவே இது உடலில் குறையும் போது தசைபிடிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சினைகள் வரும்.
2. செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் நீர்ச்சத்துக்களை முறையாக பராமரிப்பதில் பொட்டாசியத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது குறைவாக இருக்கும் பொழுது மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் வரும்.
3. அதிகமாக சோர்வு, களைப்பு பிரச்சினையால் ஒரு வேலையை கூட சரியாக செய்ய முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? இது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
4. இதயத்தின் ரிதமை ஒழுங்குபடுத்த பொட்டாசியம் உதவியாக இருக்கின்றது. இது உடலில் குறையும் போது சீரற்ற இதயத்துடிப்பு அல்லது படபடப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
5. சோடியம் அளவை சமனிலை ஆக்குவதில் பொட்டாசியத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும் பொழுது ரத்த அழுத்தம் சீராக இருக்காது அவஸ்தைப்பட வாய்ப்பு இருக்கிறது.
பொட்டாசியம் உள்ளடக்கிய உணவுகள்
- வாழைப்பழம்,
- ஆரஞ்சு,
- கீரைகள்,
- அவகோடா பழம்
இப்படியான உணவுகளில் பொட்டாசியத்தை பெற கடினம் என்பவர்கள் மருந்து வில்லைகளை எடுத்து கொள்ளலாம்.
அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்வது அவசியம்.