காலை பொழுதை இனிமையாக்க இதை செய்திடுங்க
முகத்தில் புன்னகையுடன் காலையில் எழுந்திருக்க சிறந்த வழி, ஒரு நல்ல இரவு தூக்கம் மற்றும் அழகான கனவுகள் அவசியமாகும்.
இரவில் நன்றாக தூங்கினால் அடுத்த நாள் காலை மிகவும் சிறப்பானதாக அமையும்.
நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாகவும், கலகலப்பாகவும் வைத்திருப்பதில் காலைப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது யாரும் அறிந்ததே.
ஆகவே எந்த எந்த பழக்கங்களை கடைப்பிடித்தால் தினமும் விடியும் காலைப் பொழுதை இனிமையாக்க முடியும் என்று பார்ப்போம்.
காலை நடைப்பயணம்
காலையில் நடந்தால் ஆரோக்கியமான பல நன்மைகள் கிடைக்கும். மேலும் மகிழ்ச்சிகரமான நன்மைகளை தரும். தினமும் காலையில் சூரிய ஒளியில் உங்களை வெளிக்காட்டுவது உங்களுக்கு சிறந்த மனநிலையைத் தரும்.
காலையில் நேரம் குறைவாக இருந்தால் வெயிலில் இரண்டு நிமிடங்களாவது நிற்பது நல்லது.
தண்ணீர் குடித்தல்
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் இளநீர் குடிப்பது நல்லது. இது சருமத்தை பளப்பளவாகவும் நீரோற்றத்தை சீராக வைத்திருக்கவும் உதவும்.
மேலும், ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளி எழுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் செரிமானத்திற்கு நல்லது.
ஆடைகள்
அழகாக ஆடை அணிதல் உங்களது மனநிலையை நிம்மதியாக வைத்திருக்கும். மேலும் மனநிலையை புத்துணர்ச்சியாக இருக்க வாசணை மிகுந்த திரவியங்களை பயன்படுத்துதல் நல்லது.
காலை உணவு
மகிழ்ச்சியாக உங்கள் வேலையில் கவனம் செலுத்த நல்ல காலை உணவுடன் உங்கள் ஆற்றலை ஆரம்பிக்கலாம்.
நல்ல மனநிலைக்கு உதவும் செர்ரிகள், பெர்ரி மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுவது நல்லது.
சிரிப்பு
சிரிப்பு என்பது அனைவரையும் கவரும் ஒரு வகையாகும். ஆகவே நாள் முழுவதும் சிரித்துக் கொள்வது நல்லது.
காலையில் தினமும் அனைவருக்கும் காலை வணக்கம் கூறுவது சிறந்த ஒன்றாகும்.
ஆகவே அதிலும் ஒரு கவிதையோடு காலை வணக்கத்தை கூறினால் மற்றவர்களது நாளும் சிறந்ததாக வரும்.
ஒரு சில காலை வணக்கம் தொடர்பான வாழ்த்துக்களை காணலாம்
- கதிரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.
-
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
- பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்.
-
புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!
- நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.
-
நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும் அதனையும் கடந்து வாழ பழகு. இனிய காலை வணக்கம்
- எந்நிலை வந்தாலும் முயற்சியை கைவிடாதே உன் நம்பிக்கை உன்னை உயர்த்தும். இனிய காலை வணக்கம்!!
-
விடுகின்ற காலை பொழுது வெற்றியோடு உதயமாகட்டும்..!! இனிய காலை வணக்கம்!!
- முயற்சி எனும் ஆயுத துணையுடன் அயர்ச்சி நீக்கவெற்றி காண்போம். இனிய காலை வணக்கம்
-
மலர்களை போல் அழகாக பூத்திருக்கும் புதிய நாள்!! இனிய காலை வணக்கம்
- இனிதான உள்ளம் கொண்ட உங்களின் அழகான எண்ணங்களுக்கு எப்போதும் வெற்றி தான்!! இனிய காலை வணக்கம்
- உனக்கு நீ நண்பனாக அஇருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கி கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.!