பிரபல நடிகர் பிரபு அவசரமாக மருத்துவமனையில் அனுமதி! இதுதான் காரணமாம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
நடிகர் சிவாஜிக்கு அடுத்தபடியாக சிவாஜி குடும்பத்தில் அந்த இடத்தை நிரப்பியவர் நடிகர் பிரபு. இவர் ஆரம்பத்திலிருந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.
பிரபுவிற்கு அறுவை சிகிச்சை
இந்த நிலையில், நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், “ பிரபுவிற்கு கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை நேற்று மாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். தொடர்ந்து இவர் நாளை மறுதினம் வீடு திரும்புவார்” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், பிரபுவின் உடல் நிலை சரியாக இறைவனை பிராத்திக்கிறோம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.