கல் அடைப்பை நீக்க மருத்துவமனைக்கு வந்த நபர்: வீடு திரும்பி சில மாதங்களிலே இறந்த சோகம்! பின்பு அவிழ்ந்த ரகசியம்
குஜராத்தில் சிறுநீரகத்தில் இருந்த கல் அடைப்பை நீக்க வந்த நோயாளியின் கிட்னியை எடுத்துள்ள சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பாலாசினோரில் செயல்பட்டு வரும் கே.எம்.ஜி மருத்துவமனையில் கடந்த 2011ம் ஆண்டு தேவேந்திர ராவல் என்பவர் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுநீரகத்தில் 14 மில்லிமீட்டர் அளவில் ‘கல்’ இருப்பதாக கூறியதோடு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த நபர் தனது குடும்பத்தினருடன் ஆலோசனைக் கோரி, பின்பு செப்டம்பர் 2011 செப்டம்பர் 3ம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
வீட்டிற்கு சென்ற சில மாதங்களிலேயே மீண்டும் சிறுநீரக பிரச்சினை ஏற்பட்ட நிலையில் வேறொரு தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்பு அவரது நிலை மோசமாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறந்துள்ளார்.
பின்பு மருத்துவமனை அறிக்கையில், தேவேந்திர ராவலின் உடலில் ஒரு சிறுநீரகம் இருந்ததாக தெரிவித்திருந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அகமதாபாத்தில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆம் குறித்த நபர் இறந்த பின்னரே ஒரு சிறுநீகரகத்தை முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
வழக்கு தொடர்ந்த குறித்த வழக்கு தற்போது முடிவுற்ற நிலையில், வழக்கு தொடர்ந்த தேததியில் இருந்து இன்றைய தேதி வரை, இழப்பீட்டு தொகையான ரூ. 11.23 லட்சத்துக்கு, 7.5 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.