90ஸ் கிட்ஸ் கனவுக் கன்னி வடிவேலுக்கு ஜோடியா? குஷியில் ரசிகர்கள்
வடிவேலு தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகராக உள்ளார்.
தற்போது வெளியான மாமன்னன் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தற்போது 95வது படமாக கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக சித்தாரா நடிக்கவுள்ளார்.
95 வது படம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சித்தாரா.
தமிழில் புதுபுது அர்த்தங்கள், புது வசந்தம், புரியாத புதிர் போன்ற படங்கள் சித்தாராவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.
ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோக்களின் தங்கை வேடங்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.
வடிவேலு, ஃபஹத் பாசில் இணையும் இந்தப் படம் ரோட் ட்ரிப் ஜானரில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் ஒன்றாக பயணம் செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை என்று கூறப்படுகின்றது.
இந்த படத்தில் வடிவேலு ஜோடியாக சித்தாரா நடிக்கவுள்ளது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.