அன்று ரூ.100க்கு கஷ்டம்.. இன்று லட்சங்களில் வருமானம்! ஏழை நபருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்
தற்போது சமானிய மக்கள் பெரும்பாலும் யூடியூப் தளத்தில் தனது சிறு சிறு முயற்சியால் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த தினக்கூலி ஒருவர் அவரது யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
தினக்கூலி வேலை செய்து எளிமையான வாழ்க்கையை ஓட்டிவந்த ஐசக், கடந்தாண்டு தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துவிட்டு, ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார்.
அவரது செல்போனில் முதன்முறையாக சைடிஷ் எதுவும் இல்லாமல் தான் அரிசி சாதம் சாப்பிடுவதை காணொளியாக எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது.
இதன் பின்னர் பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களில் சமையல், கலாச்சாரம் போன்றவைகளை வீடியோவாக எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு அனைத்து காணொளிகளுக்கும் லட்சக்கணக்கான பார்வையாளர் குவிந்ததோடு, வருமானமும் வரத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசக் கூறுகையில், நான் ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன், என் சமுதாயம் தொடர்பான காணொளிகளை பதிவிட தொடங்கி இப்போது என் சேனல் பிரபலமாகி உள்ளது. எனது சேனலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.