வீட்டில் செல்வம் கூரையை பிய்த்த கொட்டணுமா? பூஜை அறையை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம்
* ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பது நல்லது.
* இதனால் வீடு முழுவதும் தெய்வ சாந்நித்யம் நிறைந்து காணப்படும்.
வாஸ்து சாஷ்திரப்படி வீட்டில் செல்வம் அதிகரிக்க பூஜை அறையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வீட்டின் பூஜை அறை
நாம் காலை எழுந்ததும், இறைவனை முதலில் வழிபட்டு அன்றாட பணிகளை தொடர்வது அந்த நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சியாகவும், பாஸிட்டிவாகவும் இருக்கும்.
அவ்வாறு வீட்டில் செல்வம் பெருகி, நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, நேர்மறை ஆற்றலை கொடுக்கும் பூஜை அறையை வீட்டின் எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும்.
பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும்.
அதேபோன்று, தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும்.
வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால் வீசும் காற்றில் பூஜை அறையின் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, வீடு முழுவதையும் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகச் செய்துவிடும்.
வேறு எந்த திசையில் வைக்கலாம்?
ஒருவேளை, ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். இப்படி அமைத்து கொண்டால், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மேலும், பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்க வேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வத்தின் சக்தியை குறைத்துவிடும்.