5 ரூபாய் நாணயம் மட்டும் போதும்!! இந்த பரிகாரத்தை செய்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதை விட, அதை சேர்த்து வைப்பதும் பன்மடங்காக பெருக்குவதும் மிக முக்கியம்.
ஒவ்வொரு நூறு ரூபாயையும் நாம் எப்படி செலவழிக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்பதும் மிக அவசியம்.
தங்களுடைய வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென அதற்கான முயற்சிகளை எடுக்கும் நபர்கள் வீட்டில் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கடின உழைப்பையும் தாண்டி அதிர்ஷ்டமும் ஒரு மனிதனை கோடீஸ்வரனாக்கும்.
இந்த பதிவில், 5 ரூபாய் நாணயத்தை கொண்டு பணக்காரர் ஆவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
இதற்கு,
ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள்.
அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.
பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள்.
பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.
இப்படி அரிசியும் ஒரு ரூபாய் காசுகளும் நிரம்பிய அந்த பாட்டிலையோ அல்லது பானையையோ வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம்.
தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம்.
பீரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு. பீரோவிற்கு உள்ளே கூட இதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். உள்ளே வைப்பதை விட வெளியில் வைப்பது தான் சிறந்தது.
ஏனென்றால், நீங்கள் வைக்கும் இடம் மட்டுமே இதற்கு முக்கியம் அல்ல. அந்த பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம்.
தொடர்ந்து மாதம் ஒருமுறை அரிசியை மாற்றி பறவைகளுக்கு அதை உணவாக கொடுக்கலாம், நாணயங்களை மாற்றக்கூடாது.
விரைவில் பலன்தரக்கூடிய இந்த பரிகாரத்தால் செல்வங்கள் சேரும்.