Photo Album: கடற்கரையில் மனைவி, மகனுடன் குதூகலிக்கும் பாகுபலி பட நடிகர்
காதலிக்க நேரமில்லை பட நடிகர் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பூஜா ராமச்சந்திரன்
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
இவர், விஜேவாக இருந்த பொழுது தன்னுடன் சக விஜேவாக இருந்த கிரேக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமாராக 7 வருடங்களுக்கு பின்னர் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, நடிகர் ஜான் கோக்கேனை காதலித்து வந்த பூஜா ராமச்சந்திரன், கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான மகனும் இருக்கிறார்.
பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருந்த போது அவர் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.
இவற்றையெல்லாம் கணக்கெடுக்காத அவரின் கணவர்- ஜான் கோக்கேன், பாகுபலி, கேஜிஎஃப் வீரம், சார்பட்டா பரம்பரை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடற்கரையில் குடும்பமாக இருக்கும் படங்கள்
இந்த நிலையில், ஜான் கோக்கேன்- பூஜா ராமச்சந்திரன் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், இருவரும் மகனுடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “அழகான குடும்பம்..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
