DJ Blackயிடம் காதலைக் கூறிய பூஜா! மேடையில் கடுப்பாகிய பிரியங்கா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜா, சூழ்நிலைக்கு ஏற்ப பாடல்களை தெறிக்கவிடும் டி.ஜே.பிளாகிடம் காதலை கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் பூஜா டி.ஜே.பிளாக்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அதிகமான திறமை வாய்ந்த பிரபலங்களை அடையாளம் காட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது இணையத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் பூஜா மற்றும் டி.ஜே.பிளாக்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜாவுக்கு டைமிங் பாடல் கொடுத்தே பிரபலமானவர் டி.ஜே.பிளாக். இதன் மூலம் இவர்கள் இருவருமே தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பூஜாவை மேடைக்கு அழைக்கும் பிரியங்கா உடனே டி.ஜே.பிளாக் தனது பாணியில் பாட்டுக்களை ஒளிக்கவிடுகின்றார்.
ஒரு கட்டத்தில் பூஜா காதலைக் கூறிய நிலையில், டி.ஜே.பிளாக் அங்கிருந்து சொல்லிட்டாலே அவ காதலை என்ற பாடலை ஒலிக்கவிட்டு பிரியங்காவை கடுப்பேற்றியுள்ளார்.
என்ன DJ Black இப்படி ஆயிடுச்சு உன் வாழ்க்கை.. ?
— Vijay Television (@vijaytelevision) May 27, 2023
சூப்பர் சிங்கர் Season 9 - இன்று மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv pic.twitter.com/ZvfsVJvOfb