பூஜாவால் மேடையில் கண்கலங்கிய டி.ஜே.பிளாக்! கொடுத்த பரிசு என்ன? இதுக்குத்தான் இவ்ளோ பாட்டு போட்டீங்களா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜாவுவுக்கு, டி.ஜே.பிளாக் உண்மையில் அனுப்பிய அல்வா தற்போது பேச்சு பொருளாக இருந்து வருகின்றது.
சூப்பர் சிங்கர் பூஜா டி.ஜே.பிளாக்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அதிகமான திறமை வாய்ந்த பிரபலங்களை அடையாளம் காட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது இணையத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் பூஜா மற்றும் டி.ஜே.பிளாக்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜாவுக்கு டைமிங் பாடல் கொடுத்தே பிரபலமானவர் டி.ஜே.பிளாக். இதன் மூலம் இவர்கள் இருவருமே தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.
அல்வாவுடன் வந்த பார்சல்
டி.ஜே.வாக இருந்து தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானார். போட்டியாளரான பூஜாவிற்காக ஸ்பெஷல் வேலை செய்து அவருக்கு டைம்மிங்குக்கு ஏற்ற பாடலை போட்டு அரங்கத்தை சிரிப்பலையை ஏற்படுத்துகின்றார்.
ஒருமுறை டி.ஜே.பிளாக்கை பூஜாவின் பெரியம்மா மேடையில் வைத்து ப்ராங் செய்த நிகழ்வு இணையத்தில் படு வைரலாக பரவியது.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜாவுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தார் டி.ஜே.பிளாக்.
இதில் எனக்கு கொடுத்த அல்வாவை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இதனை தற்போது நெட்டிசன்கள் பயங்கர ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.