யப்பா... என்ன எனர்ஜி... வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த பூஜா ஹெக்டே
நடிகை பூஜை ஹெக்டேவின் உடற்பயிற்சி செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் 2010ம் ஆண்டு ‘மிஸ் யுனிவர்சு’ அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தார்.
இதனையடுத்து, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ‘முகமூடி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல்முறையாக அறிமுகமானார்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான தளபதி நடிகர் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார்.
குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. மேலும், நடைபெற்று முடிந்த 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் இவருக்கு சூடப்பட்டது.
“பீஸ்ட்” படத்தையடுத்து, தெலுங்கில் “ஆச்சார்யா”, “எஃப் 3”, போன்ற படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, இந்தியில் “சர்க்கஸ்” என்ற படத்தில் நடித்தார்.
இப்படத்தையடுத்து, “கிஸி கா பாய் கிஸி கி ஜான்” படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளோது. இப்படம் தமிழில் 2014ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்காகும்.
தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பூஜா ஹெக்டே வெறித்தனமாக உடற்பயிற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் என்ன எனர்ஜி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -