50 வயது நடிகருடன் டேட்டிங்கில் பூஜா ஹெக்டே? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
50 வயது நடிகருடன் டேட்டிங் குறித்து நடிகை பூஜா ஹெக்டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ‘முகமூடி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானார். இவர் 2010ம் ஆண்டிற்கான ‘மிஸ் யுனிவர்சு’ அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான தளபதி நடிகர் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார்.
கேன்ஸ் திரைப்பட விழா
குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. மேலும், நடந்து முடிந்த 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் இவருக்கு சூடப்பட்டது.
டேட்டிங்கில் பூஜா ஹெக்டே?
“பீஸ்ட்” படத்தையடுத்து, தெலுங்கில் “ஆச்சார்யா”, “எஃப் 3”, போன்ற படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, இந்தியில் “சர்க்கஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். “சர்க்கஸ்” படத்தையடுத்து, தற்போது அவர் நடிப்பில் “கிஸி கா பாய் கிஸி கி ஜான்” படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படம் தமிழில் 2014ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
முற்றுப்புள்ளி வைத்த பூஜா
இது குறித்து அவர் பேசுகையில், நான் எப்போதுமே சிங்கிள்தான். வருங்காலத்தில் கூட தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் நான் டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதில், துளி கூட உண்மை கிடையாது என்றார்.