உணர்ச்சிகரமானதாக மாறும் என்று எதிர்பார்க்கல... - நடிகர் கார்த்திக் நெகிழ்ச்சி!
தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் கார்த்திக் அது உணர்ச்சிகரமானதாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். சென்னையில் உள்ள கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த கார்த்திக், நியூயார்க்கில் பொறியியலில் முதுகலை படிப்பை முடித்தார்.
இதன் பிறகு 2007ம் ஆண்டு ‘பருத்தி வீரன்’ என்ற படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘நான் மகான் அல்லா’, ‘சகுனி’ உட்பட பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகம் நாளை வெளியாக உள்ளது. சமீப நாட்களாக இப்படத்தின் படக்குழுவினர் சென்னை,பெங்களூரு, மும்பை சென்று புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
நடிகர் கார்த்திக் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகர் கார்த்திக் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், விளம்பர சுற்றுப்பயணம் முடிவடைகிறது.
நாங்கள் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் வேடிக்கையாக இருந்தது, ஆனால் அது உணர்ச்சிகரமானதாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. நாளை மிகப் பெரிய நாள் என்று பதிவிட்டுள்ளார்.