மணி எப்போமே ரொமாண்டிக்கான ஆளு... - மேடையில் சுஹாசினி ஓபன் டாக்!
என் கணவர் மணி எப்போமே ரொமாண்டிக்கான ஆளு என்று நிகழ்ச்சி மேடையில் நடிகை சுஹாசினி ஓபனாக பேசியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவருடைய படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையுரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனைப் படைத்திருந்தது.
தற்போது, ‘பொன்னியின் செல்வன் -2’ கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை செய்து வருகிறது.
மேடையில் சுஹாசினி ஓபன் டாக்
சமீபத்தில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்நிகழ்ச்சயில் மேடையில் மணி சார் எப்படி உங்களை லவ் பண்ணுவாரு, அவர் எப்படிப்பட்ட லவ்வர் என்று தொகுப்பாளி நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினியிடம் கேட்டார்.
அதற்கு நடிகை சுஹாசினி பேசுகையில்,
என்னிடம் இந்த கேள்வியை 35 வருடத்திற்கு முன்னாடி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். ரொம்ப லேட்டா கேட்குறீயேமா.. என் கணவர் மணி ரொம்ப ரொமாண்டிக். அவர் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களெல்லாம் இப்படி அழகாக இருக்கிறாங்க. இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அவருடைய நிரந்தர ஹீரோயின்.. நான் எவ்வளவு சந்தோஷமாக இருப்பேன். அவர் படத்தில் இருக்கும் எல்லா விதமும் அவர் வாழ்க்கையிலும் இருக்கிறது.
திருப்பங்கள், சந்தோஷங்கள், கலாட்டா, கேலி எல்லாமே இருக்கும். காலையிலிருந்து மதியம் வரை கலாட்டா செய்து கொண்டே இருப்பார். மணி பற்றி யாருக்கும் தெரியாது. இன்றைக்கு கூட நான் கேட்டேன்.. என்ன மணி... இவ்வளவு கஷ்டமான படத்தை இவ்வளவு ஈஸியா முடிச்சிட்டீங்களேன்னு...
அதற்கு அவர் என்ன சொன்னார்ன்னு தெரியுமா? பூ...பூ... ஜூஜூபி..ன்னு சொன்னாரு. எல்லாமே ரொம்ப ஈஸியா எடுத்துப்பாரு. அவருடைய படங்களிலேயே பிடித்த படம் ‘நாயகன்’ படம் தான். அதில் என் சித்தப்பா இருக்கிறார். இப்படத்திற்கு அடுத்தப்படியாக எனக்கு ‘பொன்னியின் செல்வன்’ படம் தான் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் நீங்கதான். ஒரு குடும்பமாக இப்படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். மக்களாகிய உங்களுக்கு தான் நன்றி என்று பேசினார்.