பொன்னியின் செல்வன் திரைப்படம் 3 நாட்களிலே திரையுலகை அலற வைக்கும் வசூல் வேட்டை!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் திரைக்கு வந்து சில தினங்களிலே திரையுலகை அலற வைத்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடத்தில் களமிறங்கியுள்ளனர்.
பொன்னியின் செல்லன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
மேலும் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் திரைக்கு வந்து சில தினங்களிலே 230 கோடி வசூலித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்த படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கபடுகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து பொன்னியின் செல்லன் திரைப்படத்தின் மொத்த வசூல் தான் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள திரையுலகம் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.