Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா
Bigg Boss Munniyamma Family Entry: பிக்பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் பலநாட்களாக எதிர்பார்த்த முனியம்மாவின் குடும்பம் உள்ளே வந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Family Round நடைபெற்று வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக பலரும் உள்ளே வந்தனர். கடந்த சில வாரங்களாக போட்டியாளர்களில் இருவராக வெளியேற்றப்பட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த வாரம் ஷாதிகா, முகேஷ் இருவரும ்வெளியேறினர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க் இல்லை, நாமினேஷன் இல்லை என்று கூறி மீதம் உள்ள எட்டு போட்டியாளர்களை மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார்.
போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முதலாவது வினோத் மற்றும் லக்ஷ்மி ப்ரியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்தனர்.
பின்பு ப்ரித்வி, அன்சர் இருவரின் உறவினர்கள் வந்து சென்ற நிலையில், நேற்றைய தினம் தன்யா மற்றும் டிடிஎஃப்-யின் உறவினர்கள் வந்துள்ளனர்.
முனியம்மாவின் குடும்பம்
இந்நிலையில் முனியம்மாவின் குடும்பத்தினர் வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதாவது முனியம்மா குளித்து தலையை துடைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
இதில் முனியம்மாவின் மகன் கண்ணீருடன் உள்ளே வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தையில் மூத்த குழந்தை அம்மாவை ஓடிவந்து கட்டிப்பிடித்துள்ளனர்.
மேலும் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கும் விதமாக இவர்களது பாசப்போராட்டம் இருந்துள்ளது. மேலும் ஜேசன் குடும்பத்தினரும் உள்ளே வந்துள்ளனர்.
ஜேசன் தனது மனைவியை இந்த உலகத்திலேயே அழகான பெண் என்று பெருமையாக பேசி தனது பாசத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |