பொன்னம்பலத்தின் மகளா இது? குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க! ஆவேசமான பதில் இதோ
வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் மகள் என்று இளம்பெண்ணின் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் பொன்னம்பலம்
தமிழ் சினிமாவில் முன்னணி கண்டை கலைஞராக நடித்து வந்தவர் தான் பொன்னம்பலம். மிகச்சிறந்த வில்லனான இவர் இயக்குனர், ஹீரோ, நகைச்சுவை என நடித்து அசத்தியவர்.
முன்னணி நடிகர்களுக்கே வில்லனாக நடித்து, சிறு குழந்தைகளுக்குக் கூட பிடிக்காத அளவிற்கு தனது வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டினார்.
பின்பு அரசியலில் ஈடுபட்ட அவர் சில ஆண்டுகளுக்கு பின்பு அதிலிருந்து விலகினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய இவர், சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்த போது அதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். பின்பு இவரது அக்கா மகன் ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது நல்லபடியாக இருந்து வருகின்றார்.
பொன்னம்பலத்தின் மகள்
தற்போது பொன்னம்பலத்திற்கு கார்த்திக், கிருத்திகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இவரது மகள் என்று இளம்பெண்ணின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
சரண்யா பொன்னம்பலம் என்ற பெயரில் இருந்த இளம்பெண்ணை அவதானித்த நெட்டிசன்கள் பொன்னம்பலத்தின் மகள் ஒன்று பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பொன்னம்பலம், தன்னுடைய மகளின் பெயர் கிருத்திகா என்றும் இணையத்தில் பரவி வரும் சரண்யா பொன்னம்பலம் என்ற இளம்பெண் தனது மகள் கிடையாது... தயவுசெய்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு்ள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |