பொங்கல் தினத்தில் எங்கும் ஒலிக்கும் பாடல்கள்... என்னென்ன பாடல்னு தெரியுமா?
ஜனவரி மாதம் என்று சொன்னாலே பொங்கல் தான் அனைவரது ஞாபகத்திற்கு வரக்கூடிய கொண்டாட்டமாகும். பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் பொது எல்லா இடங்களிலும் கேட்கக்கூடிய சினிமா பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்.
பொங்கல் பண்டிகையில் ஒலிக்கும் பாடல்கள்
பொங்கலன்று ஒளிபரப்பாகக்கூடிய நிகழ்ச்சிகள், போட்டிகள், மற்றும் பட்டிமன்றங்களில் முதலில் ஒளிக்கக்கூடிய பாடலாக "பொங்கலோ பொங்கல்" பாடலான மகாநதி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் முதலில் கேட்கும். இந்த பாடலானது வாலி வரிகளில் இளையராஜா இசையில் கே.எஸ். சித்ரா பாடியிருப்பார்.
அடுத்து போக்கிரி படத்தில் இடம்பெற்றிருக்கும் "போக்கிரி பொங்கல்" பாடலானது இன்றும் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவர்கள் முதலில் தேர்வு செய்யக்கூடிய பாட்டாக இருக்கின்றது.
இளையராஜா இசையில் கமல் பாடிய விருமாண்டி படத்தில் இடம்பெற்றுள்ள "கொம்புல பூவ சுத்தி" என்ற பாடலானது ஜல்லிக்கட்டின் Theme பாடலாக இருக்கிறது எனலாம்.
பசு மாடுகளுக்கு உகந்ததாக அண்ணாமலை படத்தில் இடம்பெற்றுள்ள "வந்தேன்டா பால்காரன்" பாடலானது மாட்டு பொங்கல் அன்று ஊரெங்கும் கேட்கப்படும் ஒரு பாடலாகும். இந்த பாட்டின் வரிகளானது வைரமுத்துவால் எழுதப்பட்டு தேவா இசையில் SPB பாடியிருப்பார்.
முரட்டுக்காளை படத்தில் மலேசிய வாசுதேவன் பாடிய "பொதுவாக என் மனசு தங்கம்" பாடலானது இன்று அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கேட்கப்படுகிறது.
வாலி எழுதிய வரிகளில், இளையராஜா இசையில், பி.சுசிலா பாடிய "பூ பூக்கும் மாசம்" என்ற பாடலானது தை மாதத்தை வரவேற்கும் விதத்தில் இடம்பெற்றுள்ளது எனலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |