மாதுளை பழ தோலினை தூக்கி போடுறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க
மாதுளை பழ தோலில் உள்ள நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாதுளை
பழங்களில் அதிக சத்துக்கள் கொண்ட மாதுளம் பழத்தினை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இதன் தோலை தூக்கி போட்டுவிடுகின்றனர்.
ஆனால் இந்த தோலில் கூட பல ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. மாதுளை தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
ஆதலால் மாதுளை தோலை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள் என்ன?
மாதுளை தோல் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சளி, இருமல், தொண்டை வலி இவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
தொண்டை வலி இருக்கும்போது, வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரில் கலந்து பருகுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மை மாதுளை தோலுக்கு இருக்கின்றது.
தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராகி, நச்சுக்கள் திறம்பட வெளியேற்றப்படும்.
எனவே அடுத்த முறை மாதுளையை உரிக்கும் போது, அதன் தோலை வீணாக தூக்கி எறியாமல், இந்த அனைத்து நன்மைகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |