பாலித்தீன் கவரில் மீன் சமைக்கும் மூதாட்டி! எப்படி சாத்தியமாகும்?
சமையல் செய்வதில் சிலர் வித்தியாசமாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் பாத்திரமே இல்லாமல் யாரும் சமைப்பதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆனால் இங்கு பாட்டி ஒருவர் பாலித்தீன் கவரிலேயே மீனை சமைக்கிறார். பொதுவாக பாலித்தீன் கவர் நெருப்பில் காண்ப்பித்தால் எரிந்துவிடும் என்பது தெரியும்.
ஆனால், அதற்குள் தண்ணீரை ஊற்றி மீனே சமைக்கலாம் என்பது இந்த பாட்டியின் வீடியோவை பார்த்த பிறகே தெரிகிறது. அந்த வீடியோவில் பாட்டி ஒருவர் நிலத்தில் நெருப்பு மூட்டியிருக்கிறார்.
பின்னர் பாலித்தீன் பை ஒன்றில் நீரை நிரப்பி, நெருப்பின் மீது அந்த கவரை தொங்க விடுகிறார். அதன்பின், மீன் சமைப்பதற்கு தேவையான அனைத்து மசாலா பொருட்களையும் இறுதியாக அந்த கவருக்குள் மீனையும் போட்டு வேக வைக்கின்றார்.
இத்தனை பொருட்களையும் தாங்கியிருக்கும் பாலித்தீன் கவர் இறுதி வகை உடையாமலும், சூட்டில் உருகிவிடாமலும் இருக்கின்றது. இதனை அவதானித்த பலரும் எப்புட்றா டேய் என்று வியப்பில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Elementary Physics ? pic.twitter.com/dKBEShW6L2
— Top Videos (@TopVideosOnly) February 25, 2023