sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Apr 20, 2025 08:06 AM GMT
Report

பொதுவாகவே ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து ஆறுதலாக சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

அந்தவகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது? | Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 1/4 கிலோ மசாலாவிற்கு

மல்லி - 2 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - 1 1/2 தே.கரண்டி

சீரகம் - 2 தே.கரண்டி

மிளகு - 3/4 தே.கரண்டி

வரமிளகாய் - 6-7 

பட்டை - 2 சிறிய துண்டு 

கிராம்பு - 5

அன்னாசிப்பூ - 2 இதழ்

கறிவேப்பிலை - 1 கொத்து

கசகசா - 1 தே.கரண்டி

எண்ணெய் - 1 1/2 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 25 

நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி

பிரியாணி இலை - 1 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

கல்உப்பு - 2 தே.கரண்டி

தக்காளி - 2

சுடுதண்ணீர் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு

sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது? | Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை

நல்லெண்ணெய் - 1தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் சிக்கனை இரண்டு முறை நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நல்ல வாசனை வரும் வரையில் வறுக்த்துக்கொள்ள வேண்டும்.

sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது? | Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil

அதனையடுத்து கசகசாவை சேர்த்து லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வருத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில்  சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது? | Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil

பின்னர் அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், பிரியாணி இலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்னர்  கழுவி வைத்துள்ள சிக்கனையும் அதல் சேர்த்து, அத்துடன்  தேவையான அளவுக்கு கல் உப்பு சேர்த்து சிக்கனின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

sunday special: பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது? | Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil

அதனையடுத்து தக்காளியையும் அதில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு அதனை நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின்னர் குழம்பிற்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக சிக்கனை வேக வைக்க வேண்டும்.

இறுதியாக மற்றொரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி கிளறினால்  அவ்வளவு தான் பொள்ளாச்சி பாணியில் சுவையான சிக்கன் குழம்பு தயார்.   

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US