Passport Verificationக்கு இனி லஞ்சம் கொடுக்க தேவையில்லை: அட்டகாசமான செயலி அறிமுகம்
ஐந்து நாட்களில் பாஸ்போர்ட்டை போலீஸார் Verification செய்து பயணிகளுக்கு வழங்குவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட்டின் முக்கியத்துவம்
நமது சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்வதற்கு பயணிகளுக்கு தேவைப்படுவது இந்த பாஸ்போர்ட் மட்டும் தான். ஆனால் அதனை பெறுவதற்குள் பல இடங்களுக்கு சென்று மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்.
இதற்கான போலீஸார் Verification என்பது மிகவும் முக்கியமானது. இது மட்டுமல்லாது பிசிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும் பெற மக்கள் காவல்துறையை நாட வேண்டி இருக்கிறது.
தற்போது இருக்கும் டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பங்களை இலகுவாக அனுப்பி வைத்தாலும், போலீஸ் வெரிபிகேஷன் செய்து அனுமதி வழங்குவது நீண்ட நாட்கள் எடுக்கிறது. இப்படி ஒரு நிலையால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து பாஸ்போர்ட்டை அவசரமாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் போலிஸாருக்கு சுமார் ரூ. 300 முதல் ரூ. 500 வரையிலான பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.
போலீஸார் வெரிபிகேஷனுக்காக புதிய செயலி அறிமுகம்
இந்த நிலையை மாற்றம் வகையிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிக்களுக்கு ஒரு பாடம் புகட்டவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் “M Passport Police App” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியின் மூலம், 5 நாட்களில் பாஸ்போர்ட்டிற்கான வெரிபிகேஷன் பணியை முடித்து பயணியின் கையில் பாஸ்போர்ட்டை போலீஸார் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த புதிய திட்டத்திற்காக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு 350 டேப்லெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த செயலி முறையால் காகிதம் இல்லாமல் பாஸ்போர்ட்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறைமையால் நேர விரயம் குறைவதுடன், வெளிப்படைத்தன்மை இருக்கும் என அமைச்சால் எதிர்பார்க்கப்படுகிறது.