மாதவிடாய் காலத்திலும் விடல- நடிகை சாந்தினியின் கதறல்; மணிகண்டனை பிடிக்க தனிப்படை!
கடந்த சில நாட்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் சம்பவம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும், சென்னை அடையார் மகளிர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்காரம், மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு மற்றும் காயத்தை ஏற்படும் வகையில் பெண்ணை தாக்கியது போன்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதன்பின்னர், நடிகை சாந்தினி அளித்த புகாரிலும், திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பல முறை உறவில் ஈடுபட்டு 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தாகவும் குற்றசாட்டி உள்ளார். அதன்பின்னர், மாதவிடாய் காலகட்டத்தில் கூட தன்னை விடாமல் உறவுக்கு துன்புறுத்துவதையும், இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதையும் கூறினார்.
இதனால், போலீசார் தீவிரமாக மணிகண்டனை தேடிய நிலையில், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாததால் சைபர் துறையின் உதவியுடன் மணிகண்டனின் செல்போன் சிக்னலை வைத்து அவரைத் தேடிவருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் அவர் தனது செல்போனை பயன்படுத்தாமல் தனது உதவியாளரின் செல்போனை பயன்படுத்தி தொடர்ந்து பேசிவருவதாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், ராமநாதபுரத்திற்கு சென்ற தனிப்படை அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
தற்போது அவர் சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தி அவரை பிடிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்..