சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காவலர்... நெகிழ வைத்த காணொளி
சாலையில் வீணாக கிடக்கும் பிளாஸ்டிக்கை எடுத்து பசியை ஆற்றிய சிறுவனுக்கு பொலிசார் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். ஆம் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறப்பட்டு வந்தாலும், நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தனது அதிகாரத்தை வைத்து அராஜகம் தான் செய்து வருகின்றனர்.
இவ்வாறான கொடுமைகளை அவ்வப்போது நாம் அவதானித்து வரும் நிலையில், இங்கு காவலர் ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் கஷ்டப்பட்ட சிறுவன் ஒருவனின் தாகத்தை தணித்த காவலர் ஒருவர், அவனுக்கு புதிய செருப்பு மற்றும் ஆடைகளையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
குறித்த சிறுவனின் முகத்தில் சிரிப்பு எல்லையில்லாமல் இருந்ததுடன், அந்த காவல்அதிகாரியின் காலை இரண்டு தடவை தொட்டுக்கும்பிட்டு தனது நன்றியையும் தெரிவித்துள்ள காணொளியே இதுவாகும்.
கொடுத்துப் பாருங்கள்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 10, 2023
சந்தோஷத்தில் அவன் எத்தனை முறை காலை தொட்டு வணங்குகிறான் பாருங்கள்
மிகப்பெரிய சந்தோஷமே அவனது முகத்திலும் அதிகாரி முகத்திலும் தெரிகிறது pic.twitter.com/G8QClGepC9
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |