பருத்தித்துறையின் சொர்க்கமாக பார்க்கப்படும் தெருமூடி மடம்! வரலாறு தெரியுமா?
பருத்தித்துறை பட்டினத்தின் பிரதான வீதியிலிருந்து கிழக்குப்புறமாக தும்பளை வீதியில் அமைந்துள்ள பழைமையான ஒரு பாரம்பரியமே தெரு மூடி மடமாகும்.
இது இடது வலது ஆகிய இரு பக்கமும் தரையிலிருந்து 2 அடி உயர்த்தப்பட்டு, நீளம் வரை திண்ணையாக்கப்பட்டு, 20 அடி உயர்வாகக் கூரையமைக்கப்பட்டு இரு மருங்கையும் மூடி வெயில்படாத வகையில் அவ்வீதியால் பயணிப்போர் இளைத்துக்களைத்து வருகையில் அவ்விடத்தில் இருந்து இளைப்பாற்றிக் கொள்வதற்காக 150 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதே இந்தத் தெருமூடி மடம்.
யாழ்ப்பாணப்பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக் குறிகாட்டிகள் உள்ளன.
அவற்றில் ஒன்று தான் தெருமூடி மடமாகும். இது குறித்த வரலாற்று பின்னணி மற்றும் தனித்துவ அம்சங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
