கோடை சுற்றுலா: தமிழகத்தில் நீங்கள் மிஸ் பண்ண கூடாத நீர்வீழ்ச்சிகள்
இந்த கோடை காலத்தில் சுற்றுலா செல்ல இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழகத்தில் சிறந்த நிர்விழ்ச்சி சிலவற்றின் விபரத்தை இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
தமிழகத்தின் நீங்வீழ்ச்சிகள்
பைக்காரா அருவி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. இது உதகை அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகிறது. இது 55 மீ மற்றும் 61 மீ உயரத்தில் இருந்து கொட்டுகின்றது.
இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிக்கு அனுமதி உண்டு. மேலும் படகு சவாரி செல்ல கட்டணமாக 175 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி: தமிழக கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது தான் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி. இத தமிழ் மக்களுக்கு மிகவும் பழக்கபட்ட ஒரு நீர்வீழ்ச்சி.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து பொழுதுபோக்குவது உண்டு. இங்கு மிதமான நீர் ஓட்டம் இருக்கும் நேரத்தில் படகு சவாரிக்கு அனுமதி உண்டு.
குற்றாலம் தென்காசி: தமிழ்நாட்டில் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, குண்டாறு நீர்வீழ்ச்சி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி நீர்வீழ்ச்சி என குற்றாலத்தின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
கோவை குற்றாலம்: கோவை குற்றாலம் சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றிய மென்மையான நீர்வீழ்ச்சி ஆகும். கோவையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது.
திற்பரப்பு நீா்வீழ்ச்சி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு தெரியாதவர் யாரும் இல்லை. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இரு மாநிலத்தவரும் இங்கு வருகை
தந்து தந்து செல்வார்கள். இந்த அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு உயர்வேகத்துடன் நீர் கொட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
