வெறும் 11,999 ரூபாயில் அசத்தலான 5ஜி மொபைல்... அதிர்ச்சி கொடுக்கும் சிறப்பம்சங்கள்
போக்கோ நிறுவனம் கோக்போ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த போனில் சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
போக்கோ எம்6 ப்ரோ
போக்கோ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலை ரூ. 10,999 விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ. 12,999 விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மூன்றாவதாக வேரியண்ட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. ஆம் போக்கோ எம்6 ப்ரோ போனில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என்பதை வெளியிட்டுள்ளதுடன், இந்த புதிய வேரியண்ட் செப்டம்பர் 14ம் தேதி பிளிப்கார்டு தளத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது.
அசத்தலான வடிவமைப்பும், தரமான அம்சங்கள் கொண்ட இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.11,999 ஆகும்.
சிறப்பம்சங்கள் என்ன?
போக்கோ எம்6 ப்ரோ போன் 6.79 இன்ச் (2460 x 1080 Pixel) FHD+, LCD டிஸ்பிளே கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 பீக் பிரைட்ன்ஸ் மற்றும் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு வருகிறது.
Android 13 OS மற்றும் MIUI 14 OS கொண்ட Octa Core Snapdragon 4 Gen 2 4nm சிப்செட் வருகிறது.
அதோடு Adreno 613 GPU கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ரெட்மி 12 போனுக்கு பிறகு மலிவான விலையில், ஜென் 2 சிப்செட் வருகிறது.
இந்த போனில் 1டிபி வரையில் micro SD கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த போக்கோ எம்6 ப்ரோ போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
அதேபோல, ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி வருகிறது. பேட்டரியோடு சேர்த்து 199 கிராம் எடை கொண்டுள்ளது.
ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |