கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக் " வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!
கிறிஸ்துமஸ் என்றாலே மக்களின் நினைவில் முதலில் வருவது, கேக், பிரியாணி, புத்தாடை என்பதே. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் பலவிதமாக கேக் செய்து சாப்பிடுவதற்கே மக்கள் விரும்புவார்கள்.
தற்போது பேக்கரியில் வாங்குவதை வீடுகளில் செய்து சாப்பிடுவது ஆரோக்கியம் கூட. அந்த வகையில் வீட்டில் சுவையான பிளம் கேக் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
மைதா -100 கிராம்
பட்டர் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
ஓமம் தூள் - 1/2 ஸ்பூன்
திராட்சை - 30 கிராம்
சுக்குத் தூள் – 1/2 ஸ்பூன்
பால் - 1/4 கப்
முந்திரி,பிஸ்தா,வால்நட்- 40 கிராம்
செர்ரி பழம் – 50 கிராம்
செய்முறை:
முதலில் முந்திரி, பிஸ்தா, வால்நட் இவற்றினை நன்றாக பொடித்து வைத்துக் கொள்வதுடன், சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கார்ன் பிளாரை கிண்ணம் ஒன்றில் எடுத்துக் கொண்டு, அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து பின்பு பாத்திரத்தினை அடுப்பில் அந்த கலவை நன்றாக கூல் பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
மைதா மாவினை சலித்தும், பட்டரை உருக்கியும், செர்ரி பழத்தினை சிறு சிறு துண்டாக வெட்டியும் வைத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, பட்டர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். கிண்ணம் ஒன்றில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து, மிருதுவாக பிசைந்த கலவையில் முட்டையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.
இந்த கலவையில் பால் சேர்த்து கலந்து, பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.
வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி, பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும். ப்ரீ ஹீட் செய்து பின்பு ஓவனின் கேக் டின்னை வைத்து சுமார் 40 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.