தலையில் இருக்கும் ஒரு நரைமுடியை பிடிங்கினால் மற்ற முடிகளுக்கு என்னாகும்?
தலையில் இருக்கும் ஒரு நரை முடியை பிடிங்கினால் அந்த இடத்தில் பத்து நரைமுடிகள் வளரும் என்பது உண்மைதானா இதற்கு பதிலை பதிவில் பார்க்கலாம்.
நரைமுடி பிடிங்கினால் என்னாகும்?
நமது முன்னோர்கள் காலம் காலமாக தலையில் நரை ஒன்றை பிடிங்கினால் தலையில் இன்னும் பல நரைமுடிகள் வளர தொடங்கும் என சொல்வார்கள். இது உண்மையா இல்லையா என்பதை மருத்துவர் விளக்குகிறார்.
எல்லோருக்கும் கருப்பு முடி என்றால் மிகவும் பிடிக்கும். அதில் ஒரு வெள்ளை முடி வந்தால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்காது. ஆனால் அந்த ஒரு வெள்ளை முடியை நாம் பிடிங்க போனால் வீட்டில் இருப்பவர்கள் அதற்கு விட மாட்டார்கள்.

“ஒரு நரை முடியைப் பிடுங்கினால் பத்து நரை முடிகள் வளரும்!” என்கிற அந்த நம்பிக்கை இன்னமும் நம்மில் பலரின் மனதில் பதிந்திருக்கிறது.
இந்த மூட நம்பிக்கைக்கு மருத்துவர் ஷிவானி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
நமது தலைமுடியின் ஒவ்வொரு மயிர்க்காலும் தனித்தனியாக இயங்குகிறது. அது மற்ற நுண்ணறைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவோ, தூண்டவோ முடியாது என மருத்துவர் கூறுகிறார்.
ஒரு நரை முடியை பிடிங்கினால் அந்த இடத்தை சுற்றியுள்ள மற்ற முடிகள் நரைக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

அதற்காக நரைமுடியை பிடிங்குவது நல்லது என்று சொல்லவில்லை. அதற்கும் காரணம் உள்ளது. நரை முடியை பிடுங்குவதால் நுண்ணறையில் ஏற்படும் அதிர்ச்சி, அந்த முடி மீண்டும் வளராமல் போகக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கும்.
“முடியை பிடுங்குவதால், அந்த நுண்ணறை சேதமடையும் வாய்ப்பு அதிகம். இதனால் அந்த இடத்தில் மீண்டும் முடி வளராது” இதன் காரணமாக தான் முடியை பிடிங்கக்கூடாது என கூறப்படுகின்றது.

நரை முடியை பிடுங்குவதால் நரை அதிகரிக்காது. ஆனால், மொத்தமாக உங்கள் தலைமுடியின் அடர்த்தி குறையலாம், இது நீண்ட காலத்தில் மேலும் பெரிய பிரச்சனையாகவும் மாறும்.
இளம் வயது நரைமுடி அல்லது மதுமை நரை முடிக்கு மருத்துவர் ஆரோசனை அல்லது இயற்கை வழியை பெற்றுக்கொள்வது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |