ஐபிஎல் போட்டியால் சர்வதேச கிரிக்கெட் பாதிப்பா? பிசிசிஐ தலைவர் கங்குலியின் பதில்!
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பின் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20 போட்டிகளை விளையாடி வருகிறது.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் கோடிகளை குவிக்கும் வீரர்கள் இந்திய அணியில் பணத்தை சம்பாரிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
அப்படி பார்த்தால் தாய் நாட்டுக்காக ஒரு வருடம் முழுவதும் விளையாடினாலும் 1 கோடி ரூபாய் கிடைப்பதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு சில மாதங்கள் விளையாடுவதற்கு 5, 10, 15 என கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது.
சமீப காலங்களில் நிறைய வீரர்கள் தங்களது தாய் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
அதிலும் இரண்டு தொடரில் சிறப்பாக விளையாடினால் போதும் வாழ்வில் முன்னேற்றமடைந்து விடலாம் என்ற எண்ணம் வீரர்களுக்கு எழுந்துள்ளது.

பணத்திற்காக விளையாடவில்லை
இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவிக்கையில், முதலில் பணம் என்பது ஒரு வீரரின் செயல்பாட்டில் எந்த தொடர்பையும் கொண்டிருப்பதில்லை. சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் காலத்தை விட இப்போதுள்ள வீரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர் என்றாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியுடன் களத்தில் விளையாடுகின்றனர்.
பணத்திற்காக மட்டுமே ஒரு வீரர் விளையாடுகிறார்கள் என்று நான் கருதவில்லை. மாறாக தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ளவே இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அனைத்து வீரர்களும் விளையாடுகின்றனர்.

ஐபிஎல் போட்டியால் பாதிப்பு இருக்காது
அதனால், ஒவ்வொரு வீரரும் சர்வதேச அளவில் ஐசிசி உலககோப்பை போன்ற தொடர்களை வெல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது விஸ்வரூப எடுத்துள்ள ஐபிஎல் வரும் காலங்களில் 84, 94 போட்டிகளாக அதிகமாக உள்ளது. இதனால் சர்வதேச போட்டிகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நிறைய வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், வருங்காலத்தில் விரிவடைந்தாலும் கூட சர்வதேச கிரிக்கெட்டை பாதிக்காத வகையில்தான் ஐபிஎல் நடைபெறும் என்று கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.