இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன?
இந்தியா அனவருக்கும் ஏற்ற இடம் ஆனாலும் இந்தியாவில் உள்ள குடிமக்கள் இந்தியாவில் உள்ள சில இடங்களில் இந்தியக் குடிமக்களுக்கே அனுமதி கிடையாது என்பது யாருக்கெல்லாம் தெரியும்.
இந்தியாவில் தடை செய்யபட்ட இடங்கள்
இந்தியா அனைவரையும் சமமாக வரவேற்கும் ஒரு நாடு. ஆனால் இந்தியாவில் இந்தியர்கள் செல்வதற்கு 6 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அனைவருக்கும் வரவேற்கும் திறந்த, பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்ற பொதுவான எண்ணத்திற்கு மாறாக, இந்தியாவில் உள்ள சில இடங்களில் இந்தியக் குடிமக்களுக்கே அனுமதி கொடுக்கப்படவில்லை.
இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு தூதரக ஒப்பந்தங்கள் அல்லது குறிப்பிட்ட வணிகக் கொள்கைகள் போன்ற காரணங்களால், நாட்டிற்குள்ளேயே சில இடங்கள் இந்தியர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளன.

எந்த இடங்கள்
ரெட் லாலிபாப் விடுதி - சென்னைதமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ரெட் லாலிபாப் விடுதி, இங்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” இதனால் இந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
இந்த விடுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது. இந்த விடுதியில் தங்க விரும்பும் பார்வையாளர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் வெளிநாட்டினருக்காக மட்டுமே இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விடுதி நிர்வாகம் கூறியுள்ளது.

ஃப்ரீ கசோல் கஃபே - கசோல், இமாச்சலப் பிரதேசம் இந்த இமாச்சலப் பிரதேசத்தின் கசோல் பகுதியில் உள்ள இந்த கஃபே, இந்தியர்கள் வருகைக்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இங்கே இந்திய வம்சாவளியினர் மெனு கேட்கும் போது, மறுக்கப்பட்ட சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு மாறாக, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் இந்த கஃபே திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

பிராட்லாண்ட்ஸ் ஹோட்டல் - சென்னைசென்னையில் அமைந்துள்ள இந்த பிரிட்டிஷ் பாணி ஹோட்டல், வெளிநாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் இடமாக அறியப்படுகிறது.
இந்த இடத்தில் அதிகாரப்பூர்வமாக இந்தியர்களுக்கு தடை இல்லை என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெளிநாட்டவர்களே என கூறப்படுகிறது.
இங்கு அடையாள ஆவணங்கள் மற்றும் நுழைவு விதிமுறைகள் இந்தியர்களுக்கு கடுமையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |