பீட்சா ஊழியருக்கு 2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்! மறுநாள் அரங்கேறிய சோகம்
அமெரிக்காவில் பீட்சா நிறுவன ஊழியருக்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ.2.3 லட்சம் டிப்ஸ் கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீட்சா நிறுவன ஊழியர்
அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்திற்குட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் செயல்பட்டு வரும் பீச்டா நிறுவனத்தில் உணவக ஊழியராக பணியாற்றி வருபவர் மரியானா லம்பார்ட்.
இந்த நிலையில் எரிக் ஸ்மித் என்பவர் அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்துள்ளார். அப்போது மரியானா லம்பார்ட் அவருக்கு பீட்சா பரிமாறியுள்ளார்.
பின்னர் எரிக் ஸ்மித்துக்கு பில் கொடுக்கப்பட்ட போது, அதில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு ரூ.2.3 லட்சம் (ரூ.3000 டாலர்) டிப்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மரியானா லம்பார்ட் மிகுந்த மகிழ்ச்சியுடன் டிப்ஸைப் பெற்றுக்கொண்டுள்ளார். பில் கட்டணத்தை எரிக் ஸ்மித் கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்தியுள்ளார்.
இதனால், பீட்சா நிறுவனம் ஊழியருக்கு பணமாக டிப்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு வங்கிக் கணக்கிலிருந்து மீட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
மறுநாள் கொடுத்த ஷாக்
இந்த நிலையில், மறுநாள் வந்த எரிக் ஸ்மித், டிப்ஸாக வழங்கிய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். தவறுதலாக பெரிய தொகையை டிப்ஸாக கொடுத்துவிட்டதாகவும், பணத்தை திரும்ப வழங்குமாறும் கோரியுள்ளார்.
இதுமட்டுமின்றி கிரெடிட் கார்ட் நிறுவனத்திடம் டிப்ஸ் பணத்தை பரிமாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் டிப்ஸ் பணத்தை வங்கிக் கணக்கில் பெறமுடியாமல் ஆத்திரமடைந்த பீட்சா நிறுவனம், எரிக் ஸ்மித் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுத்தொடர்பான புகைப்பட இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.